மாஸாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் – வெளியான சூப்பர் அப்டேட்!

0
மாஸாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகர் கார்த்திக்
மாஸாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகர் கார்த்திக்

மாஸாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் – வெளியான சூப்பர் அப்டேட்!

ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக கலக்கி வந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கும் நிலையில், தற்போது புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் அவர் தயாரித்து வெளியாக இருக்கும் படம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

புது படம்:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியலில் ஒன்றான ஜீ தமிழில் டாப் சீரியலில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷபானா நடித்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் ராஜ் பல காரணங்களில் சீரியலை விட்டு விலகினார். அதன் பின் அவர் தயாரிப்பில் படம் ஒன்றை தயாரித்து இருக்கிறார். ஆனால் அந்த படத்தை வெளியிட முடியாமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

படத்தை வெளியிட வேண்டும் என்பதால் ரசிகர்கள் பணம் அனுப்ப வேண்டும் என வீடியோ வெளியிட்டு அவர் சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில் அவர் மீண்டும் புது சீரியலில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ஜீ தமிழ் சேனல் நிர்வாகம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் என்னுடைய படத்தை வாங்கி கொண்டால் நடிக்க தயார் என கண்டிஷன் போட்டதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் கண்டிஷனுக்கு சேனல் நிர்வாகம் சம்மதித்த நிலையில் அவர் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.

மேலும் அவர் ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சியான சாம்ராஜ்யம் சீரியலில் அவர் கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அவர் தயாரித்த படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. அதாவது அவருடைய படத்திற்கு Black ‘n’ White என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இன்று இரவு ஜீ தமிழில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!