கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் கமல்ஹாசன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழக திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நெகிழ்ச்சி:
தமிழக திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று வந்தார். அப்போது அவருக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பின் பரிசோதனை செய்து பார்த்த பின் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள், கட்சி சார்ந்த உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.
இவ்வாறு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை அவர் தொகுத்து வழங்கி வந்த விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதுவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தல’ என்ற பட்டத்தை மறுப்பதற்கான காரணம்? நடிகர் அஜித் தரப்பு விளக்கம்!
இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற தலைப்பில் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனை வாசகம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன் என்றும், எனது உடல்நிலை சரியாக வேண்டும் என்று எண்ணி எனக்காக பிராத்தனை செய்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்களது தூய அன்பு மட்டுமே என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.