அடடா பிக் பாஸின் ராஜ தந்திரம்.. வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் நடிகர் – இனி போட்டி பலமாக இருக்கும்!

0
அடடா பிக் பாஸின் ராஜ தந்திரம்
அடடா பிக் பாஸின் ராஜ தந்திரம்
அடடா பிக் பாஸின் ராஜ தந்திரம்.. வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் நடிகர் – இனி போட்டி பலமாக இருக்கும்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் பரபரப்பிற்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த சீசனிலும் அப்படி சில விஷயங்கள் நடந்து வரும் நிலையில், புது வைல்டு கார்டு போட்டியாளர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வைல்டு கார்டு என்ட்ரி:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வழக்கத்தை விட அதிக போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மிகவும் சுவாரஸ்யமாகவும் அதிக போட்டி நிறைந்ததாகவும் இருந்து வருகிறது. இந்த சீசன் போட்டியாளர்களில் ரட்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் குறித்த செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளது. ராபர்ட் மாஸ்டர் ரட்சித்தாவை சீரியலில் பார்த்தது முதல் மிகவும் பிடிக்கும் என்றும், தனது கிரஷ் இவர் தான் என்றும் கூறினார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அப்போது முதல் பல சந்தர்ப்பங்களில் ரட்சித்தாவிடம் வெளிப்படையாக அசடு வலிந்து கொண்டிருக்கிறார். இது பார்பவர்களுக்கே ஒரு மாதிரியாக தான் இருப்பதாகவும் கமெண்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரட்சிதா அவரை சூசகமாக திசை திருப்புவதும் பாராட்டுகளை பெற்று வந்தது. இந்நிலையில், ரட்சித்தாவின் கணவர் இது குறித்து முன்னதாக ட்வீட் ஒன்றை தனது மனைவிக்கு சாதாகமாக செய்திருந்தார்.

2026க்குள் சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு – நிர்வாகம் உறுதி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க நினைத்து ரட்சித்தாவின் கணவர் நடிகர் தினேஷை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப நிர்வாகம் திட்டமிட்டு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் என்ன நடக்கும் என்று பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!