கிங் காங்கை தனது வீட்டில் வளர்க்கும் நடிகர் தனுஷ் – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
கிங் காங்கை தனது வீட்டில் வளர்க்கும் நடிகர் தனுஷ் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!
கிங் காங்கை தனது வீட்டில் வளர்க்கும் நடிகர் தனுஷ் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!
கிங் காங்கை தனது வீட்டில் வளர்க்கும் நடிகர் தனுஷ் – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகர் தனுஷ் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் தனது குடும்பத்திற்கு கிங் & காங் ஆகியோரை வரவேற்பதாக அந்த புகைப்படத்தின் கீழே பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் நடிகர் தனுஷ். தனது எதார்த்தமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்பு, தமிழ் சினிமாவின் “சூப்பர் ஸ்டார்” ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தனக்கு உண்டான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகர் தனுஷ் பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் சிலவற்றிலும் நடித்தார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் – ஜிபி முத்து முதல் வடிவுக்கரசி வரை!

பொதுவாகவே, தமிழ் நடிகைகள் தான் ஹிந்தி திரையுலகில் நடிப்பர். ஆனால், அந்த விதியினை மாற்றி ஹீரோ தனுஷ் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அதில் வெற்றியும் கண்டார். தற்போது ஒரு சில திரைப்படங்களை அவர் தயாரித்தும் வருகிறார். அவர் கடைசியாக நடித்து வெளியான “ஜகமே தந்திரம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்று வந்தது.

தற்போது நடிகர் தனுஷ் அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து அவர் ஆங்கில திரைப்படமான “தி க்ரே மேன்” படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும், தனுஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். தனது திரைப்படங்கள் பற்றிய தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தான் தனுஷ் வெளியிடுவார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் புதிதாக இரு நாய்கள் வாங்கி இருக்கும் தனுஷ், அதற்கு கிங் & காங் என்று பெயரிட்டுள்ளார். தங்களது வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இவர் வாங்கி இருக்கும் நாய்கள் ‘ஹஸ்கி’ வகையினை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!