பிரபல இயக்குனருடன் இணையும் “குக் வித் கோமாளி” அஸ்வின் – வெளியான தகவல்!!

0
பிரபல இயக்குனருடன் இணையும்
பிரபல இயக்குனருடன் இணையும் "குக் வித் கோமாளி" அஸ்வின் - வெளியான தகவல்!!
பிரபல இயக்குனருடன் இணையும் “குக் வித் கோமாளி” அஸ்வின் – வெளியான தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வின் தற்போது பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி அஸ்வின்:

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அதில் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு இவ்வளவு வரவேற்ப்பா என அந்த நிகழ்ச்சி பட குழுவினர் கூட நினைத்து பார்க்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே வெள்ளி திரையில் கால் பதித்து உள்ளனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு சமையல் மூலமாக பிரபலமடைந்து வந்த நடிகர் அஸ்வின் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

சன் டிவி புதிய சீரியலில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகரின் மகள் – ரசிகர்கள் உற்சாகம்!

இவர் இரண்டாவது சீசனில் ரன்னர் அப், சிங்கிள் டிராக்குகள், ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்த அஷ்வின் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல புதிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி 2ல் பிரபலமடைந்த புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடலை யூடுப்பில் வெளியிட்டிருந்தார். அந்த பாடல் நல்ல ட்ரெண்ட் ஆனது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வார எபிசோட் – வெளியான புகைப்படம்!!

மேலும் ‘அடிபொலி’ என்ற மற்றொரு பாடலில் நடித்திருந்தார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசை மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்த நிலையில் இந்த பாடல் பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் மோகன் லால், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் அவர் தற்போது பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!