விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம் – ராதிகாவை சந்திக்கும் பாக்கியா! உண்மை தெரிய வருமா?

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம் - ராதிகாவை சந்திக்கும் பாக்கியா! உண்மை தெரிய வருமா?
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம் - ராதிகாவை சந்திக்கும் பாக்கியா! உண்மை தெரிய வருமா?
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம் – ராதிகாவை சந்திக்கும் பாக்கியா! உண்மை தெரிய வருமா?

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டு வந்த உண்மைகள் கோபி மூலமாகவே ராதிகாவுக்கு தெரிய வருகிறது. இப்போது இந்த சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் பாக்கியாவை சந்திக்கும் ராதிகா உண்மையை சொல்வாரா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவுக்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வந்துள்ளது. அதாவது, கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ராதிகா வற்புறுத்த அவரை கூட்டி செல்ல மறுக்கிறார் கோபி. இதனால் கோபமடையும் ராதிகா கோபியை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்து போகும் கோபி மது அருந்தி விட்டு ராதிகா வீட்டுக்கு வருகிறார். இப்போது குடி போதையில் ராதிகா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் கோபி தனது குடும்ப புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டுகிறார்.

Exams Daily Mobile App Download

அதில், கோபியுடன் பாக்கியா இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் ராதிகா ஆடிப்போகிறார். உடனே, கோபி தன்னை ஏமாற்றியதாக சொல்லும் ராதிகா, கோபியை மீண்டும் துரத்தி விடுகிறார். மறுபக்கத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கோபி, பாக்கியாவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் எனக்கு என் குடும்பம் முக்கியமில்லை, நீங்கள் ரெண்டு பேரும் தான் முக்கியம் என்பது போலவும் உளறுகிறார். இதை கேட்டு விடும் பாக்கியா கோபியின் நடவடிக்கை மீது வருத்தம் கொள்கிறார். மறுபக்கத்தில் ராதிகா, கோபி மற்றும் பாக்கியா குறித்து தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

இப்போது இந்த கதைக்களத்தில், உண்மைகளை தெரிந்து கொள்ளும் ராதிகா எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில் பாக்கியா, ராதிகாவை சந்தித்து பேசுவது போல படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இப்போது இருவரும் சந்திக்கும் போது என்ன பேசிக்கொள்வார்கள், ராதிகா ஒருவேளை பாக்கியாவிடம் கோபி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்வாரா, இல்லை கோபி போல ராதிகாவும் இந்த விஷயங்களை பாக்கியாவிடம் இருந்து மறைத்து கோபியை திருமணம் செய்வாரா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here