அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை தடுக்க நடவடிக்கை – UGC முக்கிய அறிவுரை!

0
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை தடுக்க நடவடிக்கை - UGC முக்கிய அறிவுரை!
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை தடுக்க நடவடிக்கை - UGC முக்கிய அறிவுரை!
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை தடுக்க நடவடிக்கை – UGC முக்கிய அறிவுரை!

இந்தியாவில் 2022- 23ம் கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் தற்போது வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

ராகிங்:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. இதனை தொடர்ந்து 2022- 23ம் கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் மாணவர்கள் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் “கண்காணிப்பு கேமரா” கட்டாயமான முறையில் பொருத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. இது போன்று விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அத்துடன் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு போஸ்டர்களை அனைத்து கல்லூரிகளின் விடுதிகள், உணவகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளியில் காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? அரசின் புதிய கண்காணிப்பு முறை!

Exams Daily Mobile App Download

இதே போல் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியையும் பொருத்த வேண்டும். இதனை தொடர்ந்து ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அத்துடன் கல்லூரிக்கு வருகை புரியும் முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் சீனியர் மாணவர்கள் அவர்களை சகோதர உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ராகிங் இல்லாத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!