தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தடுக்கும் விதமாக அரசு தேர்வு இயக்ககம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
பொதுத்தேர்வு மையங்கள்
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு 2022-2023ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டுமென இக்கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட்டது. அதன்படி தற்போது ஆசிரியர்கள் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை விரைந்து நடத்தி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 13ம் தேதி அன்றும் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் நடப்பு கல்வியாண்டில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிற்கு வரப்போகும் பேராபத்து.. IMF பகிரங்க எச்சரிக்கை – பொது மக்களே உஷார்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் தொடர்பாக அரசு தேர்வு இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் (2022-23) 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட கூடாது என்றும் மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து தேர்வு எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் பொதுத் தேர்வுக்கான தேர்வு மையத்தை குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்களின் பரிந்துரைகளை வருகிற 27ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்