66 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு.. இந்திய நிறுவனத்தின் 4 மருந்துகளுக்கு அதிரடி தடை!

0
66 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு.. இந்திய நிறுவனத்தின் 4 மருந்துகளுக்கு அதிரடி தடை!
66 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு.. இந்திய நிறுவனத்தின் 4 மருந்துகளுக்கு அதிரடி தடை!
66 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு.. இந்திய நிறுவனத்தின் 4 மருந்துகளுக்கு அதிரடி தடை!

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் சிரப்கள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு இந்தியாவை எச்சரித்துள்ளது.

WHO எச்சரிக்கை:

காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று இந்தியாவை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளி மருந்துகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் இருமல் மற்றும் சளி சிரப்களில் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் போன்ற பொருட்கள் இருப்பதாக சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்து, ப்ரோமெதாசின் (Promethazine Oral Solution), கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் சிரப்( Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் ( Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ( Magrip N Cold Syrup) ஆகிய 4 மருந்துகளும் கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இதனால் இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்.07) எந்தெந்த இடங்களில் ‘மின்தடை’ தெரியுமா? முழு விவரம் இதோ!!

Exams Daily Mobile App Download

இது குறித்து, மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருவதாக உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மருந்து நிறுவனம் இன்னும் எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!