Credit card வைத்துள்ளவரா நீங்கள்? பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

0
Credit card வைத்துள்ளவரா நீங்கள்? பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Credit card வைத்துள்ளவரா நீங்கள்? பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் மக்கள் தங்களது வங்கிகளின் கிரெட்டி கார்டை கடன் பெறுவது முதல் கட்டணம் செலுத்துவது வரை அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தனியார் வங்கி கிரெட்டி கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிரெட்டி கார்டு:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே மக்கள் பொது இடங்களுக்கு செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில் கூட்ட நெரிசலில் வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அதனால் முடிந்த அளவு அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே செய்து வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் மூலம் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு கட்டணம் செலுத்தும் போது கிரெட்டி கார்டுகளை பயன்படுத்துகின்றனர். தற்போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிரெட்டி கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

அது மட்டுமில்லை நீங்கள் உங்களது கிரெட்டி கார்டை வைத்து கடன் பெறலாம். வாகனங்கள் மற்றும் பிற பொருட்களின் மாத EMI களையும் செலுத்தும் வசதியும் உண்டு. இந்த நேரத்தில் தனியார் வங்கியான ICICI, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இனி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த முறை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதனால் Cred, RedGiraffe, Mygate, Paytm மற்றும் Magicbricks போன்ற தளங்களில் ICICI கிரெட்டி கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த தளங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 1 % கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த நிலையில் ICICI வங்கியும் 1% வசூலிக்கும் என்பதால் வாடிக்கையாளருக்கு கூடுதல் பணம் செலவாகும். இந்த அறிவிப்பு ICICI வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!