தமிழகத்தில் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – இபிஎஸ் கோரிக்கை!

0
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - இபிஎஸ் கோரிக்கை!
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - இபிஎஸ் கோரிக்கை!
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – இபிஎஸ் கோரிக்கை!

தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

போதை பொருள் ஒழிப்பு:

தமிழகத்தில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்து அசம்பாவித சம்பவத்திற்கும் போதை பொருட்கள் பயன்பாடு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் போதைக்கு அடிமையாகி இருக்கும் அவல நிலை இருக்கிறது. மேலும் பள்ளி மாணவிகள் பலர் போதை பொருட்கள் பயன்படுத்தும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதில் மாநிலத்தில் போதை பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகையில், தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன.

தமிழகத்தில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை? – அரசின் முடிவு

Exams Daily Mobile App Download

எங்களது ஆட்சியில் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? என கேள்வி எழுப்பி இருக்கிறார். காவல்துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அடிக்கடி இந்த செய்தி வெளி வர என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!