தமிழக அரசுப்பள்ளிகளில் குவியும் மாணவ, மாணவிகள் – சேர்க்கை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி காரணமாக தற்போது அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருவதால் கடந்த 14ம் தேதி முதல் பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்க தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து தரப்பினரும் கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மக்களின் கவனம் அரசு பள்ளிகள் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் கொரோனா தொற்று – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதனால் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் நடப்பாண்டில் உயிரியல் பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பாடப்பிரிவில் கூடுதலாக 15 சதவீத இடங்களை ஏற்படுத்த கல்வித் துறை அனுமதி அளித்தது.
மறுபுறம் தனியார் பள்ளிகளில் முந்தைய ஆண்டுகளை விட சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை தக்கவைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது, குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
TN Job “FB
Group” Join Now
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் அதிகம் சேரும் பள்ளிகளைக் கணக்கெடுத்து, அப்பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.