TNPSC தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – ஒதுக்கீட்டில் முறைகேடு!

0
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - ஒதுக்கீட்டில் முறைகேடு!
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - ஒதுக்கீட்டில் முறைகேடு!
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – ஒதுக்கீட்டில் முறைகேடு!

TNPSC தேர்வில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக ஆரணியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஷாக் நியூஸ்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) என பல்வேறு அரசுத் துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி TNPSC மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த நடைமுறை கடந்த 12 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 2664 பட்டதாரிகள் 9 மையங்களில் எழுதினார்கள். இதில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர் என TNPSC யால் குறிப்பிடப்பட்ட சுமார் 75 ஆயிரம் நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.இது குறித்து TNPSC குரூப் 2 தேர்வில் தமிழ் மொழி இட ஒதுக்கீட்டை கோரியுள்ள பட்டத்தாரிகள் கூறியது, ஒரு தேர்வர் 1ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தமிழ் வழியிலும் மேலும் முதல் பட்டப்படிப்பும் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழ் வழி இட ஒதுக்கீடுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் ரூ.6000 நிதியுதவி – ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

ஆனால் நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில் 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து முதல் பட்டப்படிப்பை ஆங்கில வழிக் கல்வியாக படித்து மீண்டும் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் தமிழில் படித்த மாணவர்களுக்கு தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர். இதனால் தமிழ் வழி கல்வி படித்த தகுதியுள்ள பட்டதாரிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே இட ஒதுக்கிட்டை முறைப்படுத்தி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!