TNPSC Group 2, 2A தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா? வெளியான ஷாக் நியூஸ்!

0
TNPSC Group 2, 2A தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா? வெளியான ஷாக் நியூஸ்!
TNPSC Group 2, 2A தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா? வெளியான ஷாக் நியூஸ்!
TNPSC Group 2, 2A தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா? வெளியான ஷாக் நியூஸ்!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு, 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலிபணியிடங்களுக்கும், 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலிபணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-2, 2ஏ தேர்வு இன்று நடைபெற்றதால், தேர்வர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதினர். இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வில் ஏராளமான தேர்வாளர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

TNPSC Group 2 தேர்வு 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 529 பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் மற்றும் இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிட்டுபட்டு உள்ளது என TNPSC முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில், குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

TNPSC குரூப் 2 & 2A வினாக்கள் எப்படி இருந்தது? ஏராளமானோர் ஆப்சென்ட்! தேர்வர்களின் ரிப்போர்ட்!

தேர்வு எழுத வந்தவர்களிடம் ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவை உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பு தான் அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் குரூப்-2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து தேர்வர்களை தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளை TNPSC விதித்திருந்தது.மேலும் இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வினை எழுதுவதற்காக நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

Exams Daily Mobile App Download

அதன்படி நாமக்கல் பகுதியில் 50 தேர்வு மையங்களில் 13, 413 நபர்களும், இராசிபுரத்தில் 29 தேர்வு மையங்களில் 7,575 தேர்வர்களும், திருச்செங்கோட்டில் 26 தேர்வு மையங்களில் 6,886 தேர்வர்கள் தேர்வு எழுதினர், இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 105 தேர்வு மையங்களில் தேர்வு நடந்து உள்ளது. மேலும் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 31,854 நபர்களில் 3,975 நபர்கள் தேர்வை எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!