விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? இதுவரை அறியாத பல தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? இதுவரை அறியாத பல தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? இதுவரை அறியாத பல தகவல்கள்!

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலான “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுசித்ராவின் சினிமா பயணம் பற்றி யாரும் அறியாத பல தகவல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை சுசித்ரா:

முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பக் கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்களில் அன்றாட குடும்பங்களில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டு காட்சிகள் வைக்கப்படுவதால் பலர் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி! அதிருப்தியில் மக்கள்!

இந்த சீரியலில் நாயகியாக தமிழக மக்களின் ஆதரவை பெற்று பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ஒரு கன்னட நடிகை. இவர் தனது சிறு வயது முதல் கன்னட சீரியல்களிலும், பல படங்களிலும் நடித்து இருக்கிறார். காவியா அஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட சீரியல்களிலும், அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற தெலுங்கு சீரியலிலும் அவர் நடித்து இருக்கிறார். மேலும் தமிழில் சைவம் படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

அதன் மூலமாக அவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நல்ல மனைவியாகவும், நல்ல அம்மாவாகவும், நல்ல மருமகளாகவும், நல்ல மாமியாராகவும் அவர் நடிக்கும் நடிப்பிற்கு தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். ஒரு குடும்ப பெண் எந்த அளவிற்கு தைரியமாகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு பாக்கியா கதாபாத்திரம் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அதனால் பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!