விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் வருண் பற்றி தெரியுமா? சின்னத்திரைக்கு வந்தது ஏன்?

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 போட்டியாளர் வருண் பற்றி தெரியுமா? சின்னத்திரைக்கு வந்தது ஏன்?
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 போட்டியாளர் வருண் பற்றி தெரியுமா? சின்னத்திரைக்கு வந்தது ஏன்?
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் வருண் பற்றி தெரியுமா? சின்னத்திரைக்கு வந்தது ஏன்?

வெற்றிகரமாக பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் போட்டியாளரான வருண் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

தனிஅடையாளம்:

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி விட்டது. போட்டியாளர்களாக பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் நிறைய அறிமுகம் இல்லாத புதுமுகங்கள் தான் போட்டியாளர்களாக இறக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பலரும் மக்களின் பரிச்சயத்திற்காகவும், திரை வாய்ப்பிற்காகவும் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் வருண் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் உள்ளது.

நவம்பர் 1 முதல் தினசரி மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன், அதவாது ஐசரி வேலனின் பேரன் தான் வருண். மிகப்பெரிய சினிமா பிண்ணனி உடைய குடும்பத்தில் இருந்து வந்த வருண் நடிப்பதை மிகவும் விருப்பமாக செய்கிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவின் மீது தனது காதலை வளர்த்துக் கொண்டுள்ளார். இதனால் கல்லூரி படிப்பை முடித்த முறைக்கு இயக்குனர் ஏ.ல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் இருந்து பின்பு அவர் இயக்கிய தலைவா படத்திலே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும், கோமாளி, வனமகன், பப்பி, ஒருநாள் இரவில் , போகன் ,நெருப்புடா, சம் டைம்ஸ், சீறு என பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் மிகவும் எளிமையாக பழகும் குணம் கொண்டவராம், நண்பர்களுடன் வெளியில் சென்று மிகவும் சாதாரணமாக தான் வளர்த்துள்ளார். இவரது குடும்ப பின்னணியை எங்கும் காட்டிக் கொள்ளாமல் பழகுவதால் நிறைய நண்பர்கள் உள்ளனராம். இருப்பினும், தனக்கான தனி அடையாளத்தை நிரூபிக்க வேண்டி தான் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!