கணவன் மதனை கலாய்த்த நடிகை ரேஷ்மா – “அபி டெய்லர்” சீரியல் படப்பிடிப்பு!

0
கணவன் மதனை கலாய்த்த நடிகை ரேஷ்மா -
கணவன் மதனை கலாய்த்த நடிகை ரேஷ்மா - "அபி டெய்லர்" சீரியல் படப்பிடிப்பு!
கணவன் மதனை கலாய்த்த நடிகை ரேஷ்மா – “அபி டெய்லர்” சீரியல் படப்பிடிப்பு!

கலர்ஸ் தமிழ் சீரியலில் “அபி டெய்லர்” சீரியலில் ரியல் ஜோடியாக நடித்து வரும் ரேஷ்மா மதன் ஜோடி, சீரியல் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர். அதில் மதன் பேசுவதை பார்த்தால் பயமாக இருக்கும் என ரேஷ்மா சொல்லி இருக்கிறார்.

மதன் ரேஷ்மா ஜோடி:

தமிழ் சின்னத்திரையில் ஜோடியாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக மாறிய பலரை நாம் பார்த்தது உண்டு. அந்த வகையில் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரேஷ்மா மதன் ஜோடி. இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் இருவரும் ரீல் ஜோடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “அபி டெய்லர்” சீரியலில் நடித்து வருகின்றனர்.

சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய ‘பிக் பாஸ்’ வனிதா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அந்த சீரியலில் சாதாரண டெய்லர் அபி, பெரிய பிசினஸ் மென் அசோக்கை திருமணம் செய்து கொள்கிறார். அது பிடிக்காமல் அசோக் அபியை சண்டை போட்டு கொடுமைப்படுத்துகிறார். இந்நிலையில் அபி அசோக் திருமணம் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரேஷ்மாவை மதன் சண்டை போடுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் ரேஷ்மாவை தள்ளிவிட்டு அவர் பழி போடுகிறார்.

Vijay TV Bigg Boss 5 Promo | பிரியங்கா, ராஜு தான் வீட்டின் ஒற்றுமைக்கு காரணம்! நிரூப்பின் தந்தை ஓபன் டாக்!

இந்த சீன பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் மதன் ரேஷ்மாவிடம் நடிப்பிற்காக இப்படி செய்வது எல்லாம் சரி இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மதன் இந்த சீரியல் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இது போல கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிதாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் மதன் சீரியலுக்காக நடிப்பதை பார்த்து நான் பயந்து விட்டேன் என ரேஷ்மா நகைச்சுவையாக தெரிவித்து இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!