AAVIN வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – மே 25 இல் நேரடி நியமன தேர்வு!

0
AAVIN வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - மே 25 இல் நேரடி நியமன தேர்வு!
AAVIN வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - மே 25 இல் நேரடி நியமன தேர்வு!
AAVIN வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – மே 25 இல் நேரடி நியமன தேர்வு!

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் ஆவினில் கால்நடை மருத்துவர் பணியிடத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் இணைவதற்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகவல்களை பற்றி முழுமையாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு 2022

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் ஆவினில் கால்நடை மருத்துவர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆவினில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Airtel பயனர்களுக்கு ஜாக்பாட் – ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

இதில் உள்ள காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த பணியிடத்தில் தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் நபர்கள் இந்த பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான நேரடி தேர்வு சேத்தியாதோப்பில் உள்ள ஆவின் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நேரடி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான நியமன தேர்வு வருகிற 25ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04144-244577, 94435 23765 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆவின் பொது மேலாளரை அணுகுவதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here