தமிழக AAVIN நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவியில் காலியிடங்கள் – முழு விவரம் இதோ!

0
தமிழக AAVIN நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவியில் காலியிடங்கள் - முழு விவரம் இதோ!
தமிழக AAVIN நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவியில் காலியிடங்கள் - முழு விவரம் இதோ!
தமிழக AAVIN நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவியில் காலியிடங்கள் – முழு விவரம் இதோ!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (AAVIN) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் 18 மே அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் TNPSC உள்ளிட்ட மற்ற அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் அரசு தரப்பில் இருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், கால்நடை ஆலோசகர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு!

அதாவது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (AAVIN) தமிழ்நாடு கால்நடை ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் மே 18ம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கால்நடை ஆலோசகர் பணிகளில் ஏற்பட்டுள்ள 2 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

இந்த பதவிக்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை kanniyakumari.nic.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50க்குள் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பங்களை செலுத்துவதற்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு வெளியான தேதி: 07-05-2022
நேர்காணல் நடக்கும் தேதி: 18-05-2022

விண்ணப்ப முறை:

AAVIN கன்னியாகுமரி ஆட்சேர்ப்பு வேலைகளுக்கு விண்ணப்பிக்க, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணம் ஆகியவற்றுடன் மே 18 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

முகவரி:

நேர்காணலில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி ஆவின், கே.பி. சாலை, நாகர்கோவில்- 3 என்ற முகவரிக்கு வருகை தர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை  விண்ணப்பதாரர்கள் kanniyakumari.nic.in என்ற  இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here