விமான துறையில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

விமான துறையில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Inquiry Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Inquiry Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Degree அல்லது ஏதேனும் ஒரு Master Degree அல்லது ஏதேனும் ஒரு Professional Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Inquiry Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது PSUs அரசு அலுவலகங்களில் Vigilance துறையில் Group-A Officer அல்லது அதற்கு நிகரான பதவிகளில் பணிபுரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Inquiry Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!