தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – 3.62 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேகரிப்பு!
இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆதார் விவரம்:
இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டை அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுகிறது. அதனால் முக்கிய ஆவணங்களான பான் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி தொடங்கியது. இந்த வேலையை மக்கள் எளிதாக செய்ய Voter Helpline என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
Twitter ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் இருந்து 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.