ஆதாரை அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரியை சரியாக வைத்து கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு? அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆதார் அப்டேட்:
இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதாரில் விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்து கொள்ள வேண்டும். தற்போது UIDAI அமைப்பு ஆதாரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் புதுப்பித்து கொள்ளலாம். ஆதாரை புதுப்பிக்கும் போது அதற்கான உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் கைரேகை மற்றும் கண்கருவிழி உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்ய கட்டாயம் ஆதார் மையம் செல்ல வேண்டும்.
வங்கி தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த வழிகாட்டல்!
ஆதார் புதுப்பிப்பு:
- uidai.gov.in.என்ற இணையதளத்தில் ஆதார் அப்டேட் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- இந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- அதனை ஆதார் சேவை மைய அதிகாரிகள் பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து விவரங்களை அப்டேட் செய்வர். இதற்கு ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- பிறகு உங்களுக்கு மையத்தில் இருந்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதனை வைத்து உங்களின் அப்டேட் விவரங்களை கண்காணிக்கலாம்.