ஆதார் Update இனி எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம் – UIDAI புதிய அறிவிப்பு!!

0
ஆதார் Update இனி எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம் - UIDAI புதிய அறிவிப்பு!!
ஆதார் Update இனி எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம் - UIDAI புதிய அறிவிப்பு!!
ஆதார் Update இனி எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம் – UIDAI புதிய அறிவிப்பு!!

ஆதார் அட்டையில் நாம் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை இனி எஸ்எம்எஸ் மூலமாக செய்யும் வகையில் புதிய அம்சம் ஒன்றை UIDAI அறிவித்துள்ளது.

UIDAI அறிவிப்பு:

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை ஆன்லைனில் மாற்றும் வசதியினை UIDAI முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதி சுசூகியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – ரூ.18,000 கோடி முதலீடு !

இனி இணைய வசதி இல்லாதவர்களும் ஆதார் அட்டையில் புதுப்பிக்கும் வசதியினையும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Virtual ID generation / Retrieval, Aadhaar locking and unlocking போன்ற சேவைகளை இந்த எஸ்எம்எஸ் வசதி மூலமாக செய்து கொள்ளலாம்.

வழிமுறைகள்:

முதலில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து 1947 என்ற எண்ணுக்கு VID Generation/Retrieval, Lock/Unlock Aadhaar Number போன்ற வடிவத்தில் எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.

எஸ்எம்எஸ் வழியாக VID-ஐ Generate அல்லது Retrieve செய்யும் முறை:
  • ஆதார் VID-ஐ Generate செய்ய, உங்கள் GVID <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947-க்கு அனுப்ப வேண்டும்.
  • உங்கள் ஆதார் VID-ஐ Retrieve செய்ய, உங்கள் RVID <space> ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947 க்கு அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் ஆதார் நம்பரை லாக் மற்றும் அனலாக் செய்யும் முறை:
  • GETOTP <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947 க்கு அனுப்ப வேண்டும்.
  • இப்பொழுது OTP வரும், அதனை, LOCKUID <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் <space> ஆறு இலக்க OTP-ஐ டைப் செய்து 1974 க்கு அனுப்ப வேண்டும். இப்பொழுது உங்கள் ஆதார் லாக் செய்யப்படும்.
ஆதாரை அன்லாக்:
  • GETOTP <space> உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை டைப் செய்து 1947 க்கு அனுப்ப வேண்டும்.
  • இப்பொழுது OTP வரும், அதனை UNLOCKUID <space> உங்கள் VID-யின் கடைசி 4 இலக்கங்கள் <space> ஆறு இலக்க OTP-ஐ டைப் செய்து 1974 க்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!