SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!

0
SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!
SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!
SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!

நமது ஆதார் அட்டையில் உள்ள தவறுகளையும், புதிய மாற்றங்களையும் நேரடியாக ஆதார் அலுவலகத்திற்கு செல்லாமல் இணைய வழியில் மாற்றியமைப்பதற்கு பல வசதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) வழங்கியுள்ளது. தற்போது இணைய வசதி இல்லாமல் எஸ்எம்எஸ் வழியாக சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

ஆதார் சேவைகள்:

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு குறிப்பிட்ட 12 இலக்க எண்களை பிரத்யேகமாக வழங்கியுள்ளது. இந்த ஆவணத்திற்கு ஆதார் அட்டை என்ற பெயரிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் நமது பெயர், ஊர், முகவரி போன்ற அடிப்படை தகவல்கள் மட்டுமில்லாமல், நமது பயோ மெட்ரிக் விவரங்கள், கருவிழி பதிவு இது ஆகிய அட்வான்ஸ்ட் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டையுடன் நமது மற்ற ஆவணங்களான வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அனைத்தும் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஆதார் அட்டையின் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகளும், நலத்திட்டங்களும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னர் ஆதார் மைய அலுவகத்திற்கு சென்று தான் அதில் உள்ள தகவல்களை திருத்தியமைக்க முடியும். தற்போது வீட்டில் இருந்த படியே நமது ஸ்மார்ட் போன்களின் மூலம் அனைத்து ஆதார் சேவைகளையும் பெறும் வகையில் முன்னேறி உள்ளது. ஆனால் தற்போது இணைய வசதி இல்லாத நிலையிலும் கூட ஆதார் சேவைகளை எஸ்எம்எஸ் வழியாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ஐடி உருவாக்கம், விர்ச்சுவல் ஐடி ரிட்ரீவல், ஆதார் லாக் மற்றும் அன்லாக் சேவைகளை எஸ்எம்எஸ் மூலம் பெறும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் ஐடி உருவாக்கம்:

  • உங்கள் ஆதார் அட்டையின் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க உங்கள் தொலைபேசியில் இருந்து 1947 என்ற எண்ணிற்கு GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி OTPஐ பெற GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை பதிவு செய்து 1947 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்தி OTPஐ பெற GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை பதிவு செய்து 1947 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

ஆதார் அட்டை லாக்/அன்லாக் செய்யும் முறை:

  • உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி லாக் செய்வதற்கு GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை பதிவு செய்து 1947 என்ற எண்ணிற்கு செய்தியினை அனுப்ப வேண்டும்.
  • அடுத்து, ENABLEBIOLOCK டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை பதிவு செய்து இடைவெளி விட்டு 6 இலக்க OTP-ஐ பதிவு செய்து 1947 எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – டிசம்பரில் முடிவு? புதிய தகவல்!

  • விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்தி லாக் செய்வதற்கு GETOTP டைப் செய்து இடைவெளி விட்டு உங்களின் விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை பதிவு செய்து 1947 எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
  • தற்போது, ENABLEBIOLOCK டைப் செய்து இடைவெளி விட்டு விர்ச்சுவல் ஐடியின் கடைசி 6 இலக்க எண்ணை பதிவு செய்து இடைவெளி விட்டு 6 இலக்க OTP-ஐ பதிவு செய்து 1947 எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!