ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தனிநபரின் அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். தற்போது ஒரே மொபைல் நம்பரை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.

PVC கார்டு

இந்தியாவில் இந்திய குடிமகனின் அடையாள ஆவணங்களுள் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசியை செலுத்துவது இருந்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் பலவற்றில் தனி நபரின் அடையாள சான்றிதழாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரே மொபைல் நம்பரை பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பி.வி.சி கார்டை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆர்டர் செய்து கொள்ளும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முடிவுக்கு வந்த கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்! மத்திய அரசு உத்தரவு!

இதனை அச்சிட குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த அட்டை கிழியாததாகவும் , நனையாததாகவும் இருக்கும். மேலும் இது குறித்து யுஐடிஏஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்த அட்டையில் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதற்கு பதிலாக எந்தவொரு மொபைல் எண்ணையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அட்டையில் பாதுகாப்பான QR குறியீடு, ஹாலோகிராம், சிறிய எழுத்துக்கள், கோஸ்ட் இமேஜ், வெளியீட்டு தேதி & அச்சு தேதி, Guilloche பேட்டர்ன், ஆதார் லோகோ உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

தற்போது ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்வது பற்றிய வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதனை தொடர்ந்து ‘எனது ஆதார் டேப்’ என்பதன் கீழ் “ஆர்டர் ஆதார் கார்டு” சேவையை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் அல்லது 28 இலக்க பதிவு ஐடியை உள்ளிட வேண்டும்.

4. அடுத்ததாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

5. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது “எனது மொபைல் எண் என்பதை சரிபார்க்க வேண்டும்.

6. இதனை தொடர்ந்து பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

7. அடுத்ததாக ‘OTP அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

8. இதையடுத்து ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ செக்பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.

9. அடுத்ததாக ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்

10. இறுதியாக ‘பணம் செலுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

11. அதன்பின்பு 5 வேலை நாட்களுக்குள் அஞ்சல் துறைக்கு அச்சிடப்பட்ட ஆதார் அட்டைகளை யுஐடிஏஐ விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here