ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0
ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மக்கள் அன்றாட வாழ்க்கையில் அனைத்து சேவைகளை பெற தேவைப்படும் முக்கிய ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சாமானிய மக்களும் ஆதார் அட்டைகளை எளிதில் பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் PVC கார்ட்-ஐ ஆன்லைன் மூலம் எளிதில் விண்ணப்பித்து எப்படி பெறலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் PVC கார்டு:

புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது முதல் அரசின் பல சேவைகளை பெற ஆதார் அட்டை முக்கிய பங்கு வகுக்கிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. UIDAI அமைப்பு மக்களுக்கு ஆதார் அட்டையை எளிதாக பயன்படுத்தும் வகையில் நான்கு வகைகளாக ஆதார் லெட்டர், ஈஆதார், எம்ஆதார் மற்றும் ஆதார் பிவிசி கார்டு ஆகியவை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்? அமைச்சர் விளக்கம்!

ஆதார் பிவிசி கார்டு என்பது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போலப் பிளாஸ்டிக் அட்டையில் வரும். மேலும் ஆதார் பிவிசி கார்டில் QR கோடு பாதுகாப்பு உடன் புகைப்படம் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் இருக்கும் என UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆதார் பிவிசி கார்டில் QR கோடு பாதுகாப்பு உடன் புகைப்படம் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் இருக்கும் என UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆதார் எண், விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடியைப் பயன்படுத்தி uidai.gov.in அல்லது Residence.uidai.gov.in மூலம் ஆதார் PVC கார்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?
 • UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in அல்லது resident.uidai.gov.in செல்ல வேண்டும்
 • ‘ஆதார் பெறுக (Get Aadhaar)’ என்பதன் கீழ் இருக்கும் ‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதைக் கிளிக் செய்ய
  வேண்டும்.
 • உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்கங்கள் கொண்ட பதிவு ஐடியை உள்ளிட வேண்டும்.
 • பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.
 • “ஓடிபி” பெறுவதற்குக் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
 • ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்
 • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து உறுதி செய்துக்கொண்டு செக் பாக்ஸ்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
 • ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • ஆதார் விவரங்களின் முன்னோட்டம் திரையில் தோன்றும். அவற்றைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
 • ‘பணம் செலுத்து (Make payment)’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • பேமெண்ட் செய்வதற்காகப் புதிய இணையதளத்திற்குச் செல்ல வேண்டும், இப்புதிய பக்கத்தில் தான் உங்கள் பிவிசி கார்டுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
 • பேமெண்ட் முடிந்த பின்பு ரசீது கிடைக்கும். இதோடு மொபைல் எண்ணுக்குச் சர்வீஸ் ரெக்வெஸ்ட் நம்பர் கிடைக்கும்.
 • ஆதார் பிவிசி அட்டையின் ஸ்டேடஸ்-ஐ SRN மூலம் கண்காணிக்க முடியும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here