ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – போட்டோவை அப்டேட் செய்வது எப்படி? முழு விவரம்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - போட்டோவை அப்டேட் செய்வது எப்படி? முழு விவரம்!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - போட்டோவை அப்டேட் செய்வது எப்படி? முழு விவரம்!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – போட்டோவை அப்டேட் செய்வது எப்படி? முழு விவரம்!

ஆதார் கார்டில் உள்ள நமது புகைப்படம் பெரும்பாலும் தெளிவாக இருக்காது. இந்த புகைப்படம் பள்ளிப் பருவத்திலோ அல்லது இளமைக் காலத்திலோ எடுத்ததாக இருக்கும். எனவே அதனை எளிமையாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

புகைப்படம் மாற்றம்:

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. மேலும் ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட இந்த அடையாள ஆவணத்தில் கார்டு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன. இது 12 இலக்க அடையாள எண்ணைக் கொண்டுள்ளது. இன்றைய நாளில் வங்கிக் கணக்குகளைத் திறப்பது போன்ற பல முக்கியமான பணிகளுக்கு ஆதார் கார்டு பயன்படுகிறது.

இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்குப் பிடிக்காத ஒன்றாகவே இருக்கும். இதற்கு காரணம், ஆதார் முதன் முதலில் எடுக்கப்பட்ட சமயத்தில் அவசர அவசரமாகப் புகைப்படம் எடுத்திருப்பார்கள். அது தெளிவாகவும் இருக்காது. சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய புகைப்படத்தைப் புதுப்பிக்க விரும்பினால், பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்

ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவது எப்படி:
  • முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.தேவையான அனைத்து விவரங்களையும் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
  • பின்னர் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் புதிய படத்தை இங்கே எடுத்து, உங்கள் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
  • இதற்கு கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.

இதையடுத்து அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று அதை வழங்கினால் அங்குள்ள நபர் நமது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஆதாரில் அப்டேட் செய்யலாம். அப்டேட் செய்வதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் போட்டோ மாற்றத்துக்கு கைரேகைப் பதிவு மட்டும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!