ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆன்லைனில் மாற்றம் – UIDAIன் புதிய அப்டேட் வெளியீடு!

1
ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆன்லைனில் மாற்றம் - UIDAIன் புதிய அப்டேட் வெளியீடு!
ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆன்லைனில் மாற்றம் - UIDAIன் புதிய அப்டேட் வெளியீடு!
ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆன்லைனில் மாற்றம் – UIDAIன் புதிய அப்டேட் வெளியீடு!

UIDAI அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் ஒருவர் தற்போதுள்ள ஆதார் அட்டையின் முகவரியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஆதார் அப்டேட்

ஆதார் இணையதளத்தின் சுய சேவை போர்டல் மூலம் பயனர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே தங்களது ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இத்தகைய சேவைகளை UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளம் உங்களுக்கு வழங்குகிறது. அதாவது தனித்துவ அடையாள அட்டையான ஆதாரை, UIDAI ன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டை வைத்து எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இது குறித்த UIDAI ன் அதிகாரப்பூர்வ ட்வீட்டில், ‘ஆதார் பயனர்களுக்கு புதிய ஆதார் சேர்க்கை மற்றும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (MBU) இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் முழுவீச்சில் பேருந்துகள் இயங்க அனுமதி? பழுது நீக்கும் பணிகள் தீவிரம்!

மேலும் குழந்தைகள் ஐந்து வயதை அடைந்ததும், 15 வயதை அடைந்ததும் புதிய ஆதார் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்த பயோமெட்ரிக் புதுப்பிப்பு மூலம் பயனரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொழி தொடர்பான அனைத்து தகவல்களையும் மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் தகவல்களை புதுப்பிக்க ரூ .50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு ரூ.100 ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த மாற்றங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஆதார் இணையதளத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி ஆதார் புதுப்பிக்கும் போது பயனர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும், 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆதார் தகவல்களை புதுப்பிக்க பயனர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் விருப்ப மொழி ஆகிய சான்றுகளை வைத்திருக்க வேண்டும். அந்த வகையில்

  • முதலாவது பெயர் சான்று. அதாவது பயனர்களின் அடையாளச்சான்று (POI) கட்டாயமாகும். இவை பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் அல்லது புகைப்பட அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் அல்லது பொதுத்துறை நிறுவனம் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • இரண்டாவது பிறந்த தேதிக்கான சான்று. அதாவது பிறப்புச் சான்றிதழ், SSLC சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
  • மூன்றாவதாக பாலினம். இவற்றை OTP வழியாக பெற்றுக்கொள்வதற்கு புகைப்படம் வழியாக முக அங்கீகாரம் தேவைப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • அடுத்ததாக முகவரி சான்று. இதற்காக பயனர்களின் பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், அரசாங்க புகைப்பட அடையாள அட்டைகள், பொதுத்துறை நிறுவனம் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, மின்சார பில், தண்ணீர் பில் உள்ளிட்டவைகளை பயன்படுத்தலாம்.
  • மொழி சான்றுக்கு எவ்வித ஆவணங்களும் தேவையில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!