அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் – ஆதார்:

இந்தியாவில் மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் அட்டைகள் மூலம் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் தீவிரம் எடுத்த கொரோனா இரண்டாம் அலையின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசுகள் இலவசமாக உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கியது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்து மற்ற மாநிலங்களில் தங்கி பணி புரியும் தொழிலார்களர்க்ளுக்கு உதாஹவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை !

இந்த திட்டம் மூலம் ஒரு ரேஷன் அட்டைதாரர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை பெறலாம். ரேஷன் அட்டை இந்தியாவில் முக்கிய ஆவணமாகவும், இருப்பிட சான்றாகவும் கருதப்படுகிறது. இந்த ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும். கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

ரேஷன் – ஆதார் இணைப்பு:

 • முதலில் uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையப்பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதில் ‘Start Now’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் உங்கள் முகவரி கேட்கப்படும் அப்போது உங்களின் மாநிலம் மாவட்டம் போன்ற விவரங்களை முழுமையாகவும் தெளிவாகவும் நிரப்ப வேண்டும்.
 • பிறகு ‘Ration Card Benefit’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும்.
 • மேற்சொன்ன விவரங்களை நிரப்பிய பிறகு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP SEND செய்து அந்த எண்ணை திரையில் பதிவிட வேண்டும்.
 • இந்த செயல்முறை அனைத்தும் நிறைவடைந்த பிறகு உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here