ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் – ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் - ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் - ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் – ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுவது ஆதார் ஆகும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் தொலைந்துவிட்டால் ஆன்லைன் மூலம் 10 நிமிடத்தில் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் மூலம் ஆதார்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமகனுக்கும் தனித்துவம் அளிக்கும் வகையில் கை ரேகை, கண் விழிகள் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் 12 இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆதார் அட்டை வழங்கப்பட்ட பிறகு தனியொரு மனிதனின் அடையாள அட்டையாக கருதி அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு வெளியீடு!

அதாவது வங்கி கணக்கு தொடங்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத அனைத்து செயல்பாடுகளுக்கும் தனிநபரின் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை தொலைந்து விட்டால் நாம் அதனை ஆன்லைன் மூலம் மீண்டும் பெற முடியும். ஏனெனில் அரசு அதன் பல்வேறு சேவைகளை மக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஆன்லைன் மூலம் ஆதார் பெறுவது பற்றிய முழு விபரம்:

1. முதலில் அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் தோன்றும் பக்கத்தில் My Aadhaar என்பதை தேர்வு செய்து Retrieve Lost or Forgotten EID/UID என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் தொடரும் பக்கத்தில் உங்களது பெயர், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும்.

3. அவ்வாறு விபரங்களை சமர்ப்பித்த பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை பதிவிட்ட பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு UID/EID எண் SMS மூலம் அனுப்பப்படும்.

4. பின்னர் My Aadhaar தேர்வில் Order Aadhaar PVC card என்ற தேர்வை க்ளிக் செய்து UID,EID அல்லது VID ஆகியவற்றை Captcha குறியீட்டுடன் உள்ளிட்ட வேண்டும்.

5. பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தி அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

6. அதனை தொடர்ந்து உறுதிப்படுத்தும் SMS உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். அதன் பின்னர் ஆதார் அச்சிடப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!