தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை!
இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேசிய கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் மாணவர்களின் கல்விக்கு உதவும் வங்கியில் மத்திய, மாநில அரசுகள் உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் அனைத்து படைப்புகளுக்கும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற படிப்புகளை தொடர்ந்து தற்போது தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி ஊக்கத்தொகை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் கல்வியாண்டில் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெறவதற்கு விண்ணப்பிக்க என்எஸ்பி என்ற இணையதளம் தொடங்கப்படவுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் போலி விண்ணப்பங்களை அடையாளம் காணும் வகையில் மாணவர்களின் சுய விவரங்களை ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். எனவே தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் அவசியம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் விண்ணப்பங்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் வசதியை மத்திய சிறுபான்மை நல அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தமிழகத்தில் தமிழகத்தில் சுமார் 62,000 மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியின் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தில் முறைகேடுகளை தடுப்பதில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களின் ஆதார் விவரங்களை உரிய நேரத்தில் சம்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.