உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தாச்சா? – எப்படி ஆதார் எடுக்கணும்? தகவல்கள் இதோ!
இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்ட ஆவணமாக ஆதார் அடையாள அட்டை உள்ளது. குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் எடுப்பது என்பது குறித்த தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை:
இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தனித்துவ 12 இலக்க ஆதார் எண்களை வழங்கி உள்ளது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக உள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குழந்தைகள் பிறந்தவுடன் இவர்களுக்கான ஆதார் அட்டையை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
Follow our Instagram for more Latest Updates
ஆதார் அட்டை பெறுவதற்கு ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழோடு சான்றிதழோடு அருகில் உள்ள ஆதார் மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சான்றிதழை வைத்து குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை ( செப் 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – லிஸ்ட் இதோ!
ஆதார் அட்டை எடுப்பது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது போன்ற பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும்போது பயோமெட்ரிக், கைரேகைகள் மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. ஆதார் அட்டை எடுப்பதற்கு எந்த விதமான வயது வரம்புகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.