ஆதார் கார்டை இனி இதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது – புதிய மாற்றம்!!
ஆதார் கார்டினை இனி சில விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. அதாவது, வங்கி கணக்கு துவங்குவதில் இருந்து பள்ளியில் சேருவது, கடனுதவி பெறுவது வரைக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மேலும், குடிமகனின் பிறந்த தேதி மற்றும் முகவரி சரிபார்க்க ஆதார் கார்டு பெறப்பட்டு வருகிறது.
தமிழக ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் – அரசின் மாஸ்டர் பிளான் என்ன?
ஆனால், இதற்கு பிறகு ஆதார் கார்டு மூலமாக இந்திய குடிமக்களின் பிறந்த தேதி, முகவரியை சரிபார்க்க முடியாது. மேலும், எந்த நிறுவனங்களிலும் இனி பிறந்த தேதி, முகவரி சரிபார்ப்பிற்காக ஆதார் கார்டு ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. இதற்கு பதிலாக கட்டாயமாக பிறந்த தேதிக்கு பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மதிப்பெண் சான்றிதழை ஒப்படைக்கலாம். அதே போல, முகவரி சான்றுக்கு குடியுரிமை சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.