EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!

0
EPFO பயனர்கள் கவனத்திற்கு - ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!
EPFO பயனர்கள் கவனத்திற்கு - ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!

PF பயனர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்புடனான (EPFO) சேவைகளை தொடர்ந்து நிறைவேற்ற தங்களது ஆதார் எண்ணை, PF கணக்குடன் இணைப்பதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் தற்போது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PF இணைப்பு

வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை, PF கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி, ஆதார் இணைப்பு சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வடகிழக்கு மற்றும் பிற குறிப்பிட்ட வகுப்பு நிறுவனங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 25,404 பேருக்கு கொரோனா – 339 பேர் உயிரிழப்பு!

இது தொடர்பாக EPFO தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கவனத்தில் கொண்டு ஆதார் இணைப்பு சேவைகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக PF ஊழியர்கள் மேற்கொண்டு வரும் கடுமையான சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த நீட்டிப்பு கொடுக்கப்படுகிறது. என்றாலும் வடகிழக்கு மற்றும் சில வகுப்பு நிறுவனங்களின் UAN ஐ ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், EPFO அமைப்பு மத்திய அரசின் முன் ஒப்புதலுடன், மின்னணு சலான் கம் ரிட்டர்ன் (ECR) தாக்கல் செய்வதற்கான ஆதார்-UAN இணைப்பு செயல்முறையின் காலக்கெடுவை நீட்டித்தது. அதன் படி செப்டம்பர் 1 வரை முந்தைய காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஊழியர்களின் ஆதார் அட்டை தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதால் இச்சேவைகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 5570 வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!

இருந்தாலும், இதுவரை சுமார் 94% EPFO உறுப்பினர்கள் UAN ஐ ஆதார் உடன் இணைத்துள்ளனர். என்றாலும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வட கிழக்கு பிராந்தியத்தின் EPFO நிர்வாக மண்டலத்தில் உள்ள PF பயனர்கள் குறிப்பிட்ட காலத்தில் இந்த சேவைகளை நிறைவேற்றாததால், இப்பகுதி மக்களுக்காக டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!