ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!

0
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!

2022 மார்ச் 31க்குப் பிறகு 3 மாதங்களுக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். மறுபுறம், ஆதார் மற்றும் பான் அட்டையை 3 மாதங்களில் அதாவது ஜூன் வரை இணைக்கவில்லை என்றால், 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று CBDT அறிவிப்பை வெளியிட்டது. மேலும் எளிய முறையில் ஆதார்- பான் எப்படி இணைப்பது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஆதார்-பான் இணைப்பு :

இந்தியாவில், வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் ஆகும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA கீழ், ஜூலை 1, 2017 அன்று PAN ஒதுக்கப்பட்ட அனைத்து நபர்களும், ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்களும் அல்லது ஆதார் எண்ணைப் பெற்றவர்களும், தங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி 2022, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், ஓராண்டு வரை ஆதான் -பான் கார்டை அபராதத்துடன் இணைத்திட மத்திய அரசு அனுமதிக்கிறது. ஒருவேளை, இப்போதும் தவற விடும் பட்சத்தில், பான் கார்டு செயலிழிந்து போய்விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் ஆதார்- பான் எண்ணை இணைக்க தவறியவர்கள் ஏப்ரல் 1, 2022 தேதியிலிருந்து ஜூன் 30, 2022 வரை பான் ஆதார் அட்டையை இணைத்தால் 500 ரூபாய் அபராதமும், இந்த இடைப்பட்ட மூன்று மாதத்துக்குப் பிறகு, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்தால் 1,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

1.முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளம் http://www.incometax.gov.in செல்ல வேண்டும்.

2.அதில், quick links ஆப்ஷனில் Link Aadhaar கிளிக் செய்ய வேண்டும்.

3.அடுத்து தோன்றும் திரையில், பான் நம்பர், ஆதார் எண், பெயர், மொபைல் நம்பர் பதிவிட வேண்டும்.

4.விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு, ‘I validate my Aadhaar details’ ஆப்ஷன் செலக்ட் செய்து, Continue ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

5.ரெஜிஸ்டர் செய்த நபருக்கு, one time password அனுப்பப்படும். அதனை கேட்கும் இடத்தில் டைப் செய்து, Validate கொடுக்க வேண்டும்.

6.தொடர்ந்து, அபராத தொகையை செலுத்தியபின், பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!