ஆதார் எண், பான் கார்டு இணைப்பு – இன்றே கடைசி நாள்! 1000 ரூபாய் அபராதம்!!

0
ஆதார் எண், பான் கார்டு இணைப்பு - இன்றே கடைசி நாள்! 1000 ரூபாய் அபராதம்!!
ஆதார் எண், பான் கார்டு இணைப்பு - இன்றே கடைசி நாள்! 1000 ரூபாய் அபராதம்!!
ஆதார் எண், பான் கார்டு இணைப்பு – இன்றே கடைசி நாள்! 1000 ரூபாய் அபராதம்!!

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கு வருமான வரித்துறை கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் பயனாளர்கள் விரைந்து தங்கள் சேவையை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் – பான் இணைப்பு

ஆதார் எண் மற்றும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த இரண்டு எண்களையும் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறையின் சார்பில் அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. முன்னதாக பல பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள் வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கூறி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இவற்றிற்கு தீர்வு காணும் விதத்தில் ஆதார் எண் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது.

TN Job “FB  Group” Join Now

இந்த சட்டப்படி ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு 2017ஆம் ஆண்டிலிருந்து நீட்டிக்கப்பட்டு இதன் இறுதி நாளாக 2021 மார்ச் 31ஆம் தேதி என கொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மார்ச் 31க்குள் ஆதார் எண்ணை பான் என்னுடன் இணைக்காதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதள பக்கத்துக்கு செல்லவும்.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத ஊதியம் – புதிய அறிவிப்பு!!

அந்த பக்கத்தில் இடது புறம் இருக்கும் Quick Links என்ற ஆப்ஷனில் Link Aadhaar என்ற பதிவை கிளிக் செய்யவும். அதில் பான் எண், ஆதார் எண், உங்கள் பெயர் ஆதார் அட்டையில் இருப்பது போல நிரப்ப வேண்டும். பிறகு உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால், அதில் check box என்ற ஆப்ஷனை டிக் செய்யவும். பிறகு ஆதார் தகவல்களை சரி பார்க்க check box ஐ மீண்டுமாக டிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள captcha குறியீட்டை சரியாக பதிவு செய்து link aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்!!

ஆதார் எண் பான் எண்ணுடன் இணைந்ததா என்பதை கண்டுபிடிக்க https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வலைதள பக்கத்துக்கு செல்லவும். அதில் dash board என்பதில் profile settings ஆப்ஷனை கிளிக் செய்யவும். Profile settings என்பதில் கடைசி ஆப்ஷனாக உள்ள link aadhaar என்பதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைந்து விட்டது என்றால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கொடுக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால் ஆதார், பான் இணைப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சென்று மீண்டுமாக உங்கள் தகவல்களை பதிவிடவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!