PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அமைப்பு புதிய விதி!!

2
PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் - EPFO அமைப்பு புதிய விதி!!
PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் - EPFO அமைப்பு புதிய விதி!!PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் - EPFO அமைப்பு புதிய விதி!!
PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அமைப்பு புதிய விதி!!

ஊழியர்களின் வருங்கால வாய்ப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து புதிய விதியை EPFO அமைப்பு மாற்றங்களை செய்துள்ளது.

EPFO அமைப்பு:

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO) கடந்த ஜூன் 1ம் தேதி முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்த புதிய விதியானது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று EPFO அறிவித்துள்ளது. புதிதாக திறக்கப்படும் கணக்குகள் ஆதார் மூலமாகவே தொடங்கப்படுவதால் புதிதாக இணைக்க தேவையில்லை. PF கணக்குடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மற்றும் நேரடியாக EMPLOYEES PROVIDENT FUND அலுவலகத்திலும் இணைக்கலாம். இந்த புதிய விதியை நிறைவேற்றாத பட்சத்தில் EPFO ன் எந்த ஒரு சேவையையும் பயன்படுத்த முடியாது என்று சமூக பாதுகாப்பு கோட் 2020 ன் பிரிவு 142 ன் கீழ் EPFO உத்தரவு வெளியிட்டுள்ளது.

தமிழக பேக்கரி, மளிகை கடை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிகாரி வெளியீடு!!

ஆன்லைன் முறை:

  • முதலில் EPFO ன் அதிகாரபூர்வ இணையதளமான www.epfindia.gov.in க்கு செல்ல வேண்டும்.
  • இப்பொழுது ஆன்லைன் சேவையில் உள்நுழைந்து, e-KYC ஐ கிளிக் செய்து, Link UAN Aadhaar என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது UAN எண் மற்றும் UAN கணக்கில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை பதிவேற்ற வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.
  • இப்பொழுது 12 இலக்க ஆதார் எண்னை உள்ளிட்ட வேண்டும்.
  • OTP VERIFICATION என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • மீண்டும் ஒரு OTP எண் வரும். அது சரிபார்க்கப்பட்ட பிறகு ஆதார் எண் PF கணக்கில் சேர்க்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. PF கணக்கில் பழய தொலைபேசி நம்பர் உள்ளது
    அந்த நம்பர் இப்பொழுது என்னிடம் இல்லை

    இப்பொழுது உள்ள நம்பரை பதிவு செய்ய ஏதேனும் வழி உள்ளதா
    மற்றும் ஆதார் பதிவு செய்ய ஏதேனும் வழி உள்ளதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!