அரசு ஊழியர்கள் PF சலுகைகளை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அறிவிப்பு!

0
அரசு ஊழியர்கள் PF சலுகைகளை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் - EPFO அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் PF சலுகைகளை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் - EPFO அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் PF சலுகைகளை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) கீழ் PF பணத்தை பெற வேண்டும் என்றால் அவர்கள் PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மாதந்தோறும் செலுத்தப்படும் நிறுவனப்பங்கு தொகையை PF கணக்கில் வைப்பு வைக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

PF கணக்கு:

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒரு ஊழியர் PF பணத்தை எடுக்க வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஊழியரின் PF கணக்குடன் அவரது ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து EPFO வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2020 சோசியல் செக்யூரிட்டியின் 142 பிரிவு நடைமுறையில் உள்ள நிலையில், நிறுவனங்களுக்கான ECR (Electronic Challan cum Return) முறை ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட UAN கணக்கிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் அரிசி விநியோகம்!

அதன் படி ஆதார் எண் உடன் இணைக்கப்படாத UAN கணக்கிற்கு EPFO ன் எவ்வித சேவைகளும் கிடைக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவர் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவேண்டும் என்றால் அவரது கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் PF கணக்கில் தொடர்ந்து முழுமையான சேவைகள் மற்றும் நிறுவனத்தின் PF பங்கீடு ஆகியவை பெற வேண்டுமென்றாலும் ஆதார் இணைப்பு முக்கியம்.

TN Job “FB  Group” Join Now

இது தவிர கொரோனா தொற்றின் போது Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) திட்டத்தின் கீழ் PF வாடிக்கையாளர்களுக்கு, கோவிட் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. PMGKY திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் கிராக்கிப்படி அல்லது Member’s credit அளவில் 75 சதவீதம், இவற்றில் குறைவாக இருக்கும் தொகையை முன் பணமாக பெற்றுக்கொள்ளலாம். இவற்றை பெற்று கொள்வதற்கும் உங்கள் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!