ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!!

2
ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!!

வங்கி, ரயில் பயணம், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்து தேவைகளுக்கும் மத்திய அரசின் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆன்லைன் மூலம் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

மத்திய அரசால் ஒவ்வொரு இந்திய பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை தான் ஆதார். இந்த அடையாள அட்டை கல்வி நிறுவனங்கள் துவங்கி அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தனி மனித அடையாளத்திற்காக மட்டுமல்ல பிற தேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அது போல குழந்தைகளுக்கும் கூட பள்ளிகளில் ஆதார் எண் கேட்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன்படி ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கு பிறப்பு சான்றிதழே போதுமானது. இதில் 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் முறையின் மூலம் ஆதார் அட்டைக்கு தேவையான தகவல்கள் பெறப்படும். அதே நேரத்தில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் பிற தகவல்களுடன் பால் ஆதார் அட்டை என்று வழங்கப்படுகிறது.

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

குழந்தைகளின் பெற்றோர்களின் விவரங்களுடன், குழந்தைகளின் போட்டோ, பள்ளி ஐடி கார்டுகளுடன் ஆதார் மையத்திற்கு சென்றால் குழந்தைகளின் ஆதார் தகவல்களுடன் பெற்றோர்களின் ஆதார் தகவல்கள் இணைக்கப்படும். இப்படி ஆதார் மையத்தில் பதிவு செய்யப்படும் ஆதார் அட்டை 90 நாட்களுக்குள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பால் ஆதார் அட்டை உள்ள குழந்தைகளுக்கு 5 வயதில் ஒருமுறையும், 15 வயதில் ஒரு முறையும் ஆதார் அட்டை அவசியம் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற இணையதளத்துக்கு சென்று நியூ ஆதார் அல்லது ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் குழந்தைகளின் பெயர், முகவரி, பெற்றோரின் தகவல்கள், நகரம், மொபைல் எண், ஈமெயில் போன்றவை கேட்கப்படும்.
  • இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு வீட்டு முகவரி, ஊர், மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பிறகு Fixed appointment என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இன்று முதல் மாநிலத்தில் கடும் ஊரடங்கு? முதல்வர் தகவல்!!

  • அதில் ஆதார் எண் பதிவுக்கான தேதியை தேர்வு செய்து உங்கள் இடத்துக்கு அருகில் இருக்கும் ஆதார் மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பாக தேவையான ஆவணங்கள் மற்றும் ரெபரன்ஸ் எண்ணுடன் குறிப்பிட்ட தேதியில் ஆதார் மையத்திற்கு சென்றால் வெரிஃபிகேஷன் செய்யப்படும்.
  • வெரிஃபிகேஷன் முடிந்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்படும். அதன் பிறகு உங்கள் குழந்தைக்கான ஆதார் அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!