ஆதார் கார்டு முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!!

2
ஆதார் கார்டு முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டு முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டு முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!!

நாட்டில் பலருக்கும் ஆதார் கார்டில் பல பிழைகள் ஏற்பட்டிருக்கும். தற்போது அதனை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நாம் யாரும் இனி இ-சேவை மையத்திற்கு செல்ல தேவையில்லை. அதற்காக வீட்டில் இருந்தே செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதார் அப்டேட்:

நாட்டில் மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஆதார் கார்டை பெற்றுள்ளனர். தற்போது ஆதார் கார்டு வங்கி கணக்கு துவக்குவதில் இருந்து, போன் சிம் கார்டு வாங்குவதற்கு வரை பயன்படுகிறது. அந்த அளவிற்கு நாட்டில் ஆதார் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை ஆலோசனை!!

ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்கு மக்கள் அனைவரும் இ-சேவை மையத்தில் காத்து கிடக்கின்றனர். தற்போது அதற்கான எளிய வழிமுறை வெளியாகியுள்ளது. அதன்படி https://uidai.gov.in/ என்னும் அதிகாரபூர்வமான தளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். பெரும்பாலுமான மக்களுக்கு முகவரி பிழை தான் இருக்கும். தற்போது அதனை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் முதலாவதாக மேலே குறிப்பிட்டுள்ள தளத்தை கிளிக் செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்பு அதில் Update your address online என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின்பு அதில் Proceed to update address என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் தங்களது ஆதார் என்னை பதிவிட்டு send OTP என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின்பு தங்களது பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு ஓர் OTP வரும். அதனை அதில் பதிவு செய்தால் நீங்கள் உங்கள் ஆதார் கணக்கிற்குள் சென்று விடலாம்.
  • பின்பு Update address by online proof என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்கள் ஊதியம் – நிதி ஒதுக்கீடு!!

  • நீங்கள் உங்களது முகவரியை மாற்ற வேண்டும் என்றால் அதில் உள்ள Modify என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் முகவரியை மாற்ற வேண்டும்.
  • பின்பு சரியான முகவரி கொண்ட சான்றை ஸ்கேன் செய்து அதில் பதிவேற்றம் செய்து அதில் Submit என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் முகவரி மாற்றம் கோரிக்கை ஏற்கப்படும்.
  • இதனை உறுதிபடுத்தும் வகையில் உங்களுக்கு ஓர் எண் வழங்கப்படும். அதனை வைத்து நீங்கள் தங்களது ஆதார் ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் முகவரி அப்டேட் ஆன பின்பு தங்களது ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நான் புதிய வாடகை வீட்டிற்கு இப்போது தான் சென்றுள்ளேன் எனவே என்னிடம் எந்த விதமான வீட்டு முகவரி சான்றிதழும் இல்லை எனவே ஆதார்கார்டில் எப்படி முகவரியை மாற்றம் செய்வது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!