தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, மழை வெள்ளம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் குறைந்து சற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 6 நாட்கள் என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் கொட்டித் தீர்த்த பருவ மழையின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. விடாது தொடர்ந்த கனமழையால் மாணவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்பட்டது.

ராதிகாவுடன் பழகமாட்டேன் என கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில் ஓமிக்ரான் எனும் மாறுபாடு அடைந்த கொரோனா பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. குறுகிய காலமே உள்ளதால் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கும் நோக்கில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடர்பான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.11) ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

அதன்படி திருப்புதல் தேர்வுகள் டிச.17 முதல் டிச.24ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு முடிவடைந்த உடன் டிச.25 முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!