ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு – தேவையில்லாத இடங்களில் கட்டாயமில்லை!

0
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு - தேவையில்லாத இடங்களில் கட்டாயமில்லை!
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு - தேவையில்லாத இடங்களில் கட்டாயமில்லை!
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு – தேவையில்லாத இடங்களில் கட்டாயமில்லை!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டை தேவையில்லாத இடங்களில் மக்கள் பயன்படுத்த வேண்டாம் என UIDAI எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

மக்களின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது. வங்கிகளில் புதிய கணக்கு தொடங்குவது முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது வரை ஆதார் அட்டை இருப்பது அவசியமாகி இருக்கிறது. இந்நிலையில் UIDAI ஆதார் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஆதார் அட்டை பயனர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை தெரிவிப்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து மே 29 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆதார் நகல்களை கட்டாயம் தேவை இல்லாத இடங்களில் பயன்படுத்த வேண்டாம் எனவும், பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலைமை இருந்தால் பதிவிறக்கம் செய்தபின் ஆதார் குறித்த விவரங்களை டெலிட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான சேவைகளை செய்ய ஆதார் கட்டாயமாக இருப்பின் ஆதார் கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் கார்டைப் பயன்படுத்தும்படி ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரூ.32,500/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஆதார் குறித்து அறிவிப்பு வெளியிட்டாலும் கட்டாயம் ஆதார் தேவை என சொல்லும் தனியார் நிறுவனங்களிடம் என்ன சொல்வது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. அப்படி அடிப்படை ஆவணம் கட்டாயம் தேவை என ஒரு தனியார் நிறுவனம் சொன்னால் ஆதாருக்கு பதிலாக வேறு எதாவது அடையாள அட்டையை பயன்படுத்தலாமா என கேட்க வேண்டும் அப்படி இல்லையென்றால் மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்தலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நீங்கள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ KYC அப்ளை செய்ய வேண்டும்.

அதற்கு மத்திய அரசு அல்லது சட்டப்பூர்வ அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பில்கள், அடையாள அட்டைகள், முகவரி சான்றிதழ் போன்றவற்றை தான் சமர்ப்பிக்க வேண்டும் அதற்கும் ஆதார் அட்டை கட்டாயமில்லை. KYC வெரிபிகேஷன் செய்ய ஆதார் கட்டாயம் தேவை என்ற நிலைமை வந்தால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்களிடம் ஆதாரை கொடுக்க தேவை இல்லை. பதிலுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு UIDAI ஆல் அனுப்பப்படும் OTP மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்ய முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!