வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்களுக்கு விடுமுறை – காரணம் இது தான்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்களுக்கு விடுமுறை - காரணம் இது தான்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்களுக்கு விடுமுறை - காரணம் இது தான்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்களுக்கு விடுமுறை – காரணம் இது தான்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது நடைபெற்று வரும் ஜூலை மாதத்தில் மீதமுள்ள 22 நாட்களில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடர்பான முழு பட்டியலையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

வங்கி விடுமுறை

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் ஜூலை மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இப்போது இம்மாதம் துவங்கி இன்றுடன் 9 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் மீதமுள்ள 22 நாட்களில் சுமார் 9 தினங்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரும் 9 நாட்களில் பண்டிகைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.

Exams Daily Mobile App Download

இது குறித்த ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, குறிப்பிட்ட சில வங்கி விடுமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் காங் ரதஜாத்ரா, கர்ச்சி பூஜை, பக்ரித், ஈத்-உல்-ஆஷா, பானு ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் இந்தியாவில் உள்ள வங்கிகள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் மூடப்பட இருக்கிறது. அதன்படி வரும் ஜூலை 11, திங்கள் கிழமை அன்று ஈத்-உல்-அஜாவை முன்னிட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள வங்கிகள் அடைக்கப்படும்.

டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 8% வரை சம்பள உயர்வு?

தொடர்ந்து ஜூலை 13, புதன்கிழமை பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிம் பகுதியில் வங்கிகள் செயல்படாது. மேலும், ஜூலை 14, வியாழன் அன்று பெ டீன்க்லாம் தினத்தன்று மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16, சனிக்கிழமை ஹரேலா பண்டிகை அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது. தொடர்ந்து ஜூலை 26, செவ்வாய் அன்று கேர் பூஜையை முன்னிட்டு திரிபுராவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here