சென்னை மெரினாவில் வர போகும் சூப்பர் திட்டம் – மாநகராட்சி ஆலோசனை!

0
சென்னை மெரினாவில் வர போகும் சூப்பர் திட்டம் - மாநகராட்சி ஆலோசனை!
சென்னை மெரினாவில் வர போகும் சூப்பர் திட்டம் - மாநகராட்சி ஆலோசனை!
சென்னை மெரினாவில் வர போகும் சூப்பர் திட்டம் – மாநகராட்சி ஆலோசனை!

நாட்டின் 4-வது பெருநகரமாக விளங்கும் சென்னையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையின் மெரினா கடற்கரையில் வைஃபை சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வைபை வசதி :

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் 2-வது பெரிய கடற்கரையாகும். சென்னைக்கு வருபவர்கள் கட்டாயம் மெரினா கடற்கரையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு பிரபலமான சுற்றுலா தளமாக மெரினா உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மெரினா கடற்கரை பகுதியை மேம்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் வைஃபை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா மட்டுமல்ல சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமான பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளிலும் வைபை வசதி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதனை தொடர்ந்து வைபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகளுடன் கடந்த 27-ம் தேதி இணைய சேவை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

திருமணம் ஆகாத பெண்களுக்கு கருக்கலைப்புக்கு உரிமை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த ஆலோசனையில் வைபை வழங்கும் நிறுவனம் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில்,மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலிகள் மூலமாகச் சென்று கடலை ரசிக்க எதுவாக பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!