வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு – இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

0
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு - இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு - இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு – இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு எண், பான் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை இணைக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் – லைசன்ஸ்:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டை மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற முடியும். அதுமட்டுமில்ல வங்கி பணப் பரிவர்த்தனைகள், சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் இந்த ஆதார் பயன்படுகிறது. தற்போது ஆதார் அட்டை இல்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது.

Exams Daily Mobile App Download

இத்தகைய முக்கிய ஆவணமான ஆதாருடன் மொபைல் எண், வங்கி கணக்கு எண், பிஎப் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் மூலம் இரட்டை பெயர் பதிவு, போலி வாக்கு பதிவு போன்றவைகளை தடுக்க முடியும் என்று தெரிவித்தது. அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலி ஓட்டுநர் உரிமங்களை பெற்று மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் ஆதார் – ஓட்டுநர் உரிமம் இணைப்பு:
  • tnsta.gov.in என்ற இணையதளத்தில் லிங்க் ஆதார் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் தோன்றும் மெனுவில் “டிரைவிங் லைசென்ஸ்” என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஓட்டுநர் உரிம எண்ணை பதிவிடவும்.
  • அடுத்தாக Get Detail என்பதை கிளிக் செய்து ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • மேற்கண்ட செயல்முறைகள் முடிந்தவுடன் submit கொடுத்து ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!