தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு – நகை வியாபாரிகள் அதிர்ச்சி!

0
தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு - நகை வியாபாரிகள் அதிர்ச்சி!
தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு - நகை வியாபாரிகள் அதிர்ச்சி!
தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு – நகை வியாபாரிகள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் ஹால்மார்க் முத்திரையை கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட நிலையில், தற்போது ஹால்மார்க் முத்திரைக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ஹால்மார்க் கட்டணம்:

மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்ட அறிக்கையின் படி தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டணம் 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் வெள்ளி மற்றும் அது சார்ந்த கலைப் பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டணம் ரூ. 25ல் இருந்து ரூபாய் 35ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டணமானது நகையின் அளவு எவ்வளவு இருந்தாலும் ஒரே அளவு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹால்மார்க் முத்திரை கட்டணமானது 2018 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டதற்கு பின் தற்போது தான் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த’ வங்கியின் உரிமம் இனி ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு – பணத்தை சீக்கிரம் எடுத்துருங்க!

Exams Daily Mobile App Download

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்கப்படும் தங்கம் ஹால்மார்க் முத்திரை இருப்பது கட்டாயம் ஆகும். ஆனால் வெள்ளி நகைகளில் அது கட்டாயம் இல்லை. தற்போது 14 கேரட், 18 கேரட், 20 கேரட், 22 கேரட், 23 கேரட், 24 கேரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் கட்டண உயர்வால் நகை வியாபாரிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!