தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு – அமைச்சர் பேட்டி!

உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. மேலும், தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் கால்தடம் பதித்துள்ளது. அதனால் தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய் :

ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழக-கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவாதவாறு இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் பயணிகளின் முகம், கைகளில் கொப்புளங்கள் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பரிசோதனை பணிகள் நடைபெறுவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு –  இன்டர்வியூ மட்டுமே !

அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் குரங்கு அம்மை நோயை கண்டறிய ஐ.சி.எம்.ஆர். ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. மேலும், குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஒன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு 10 படுக்கை வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும் அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here