பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு, பள்ளிக் கல்வித்துறையில் வேலை – ஜூலை 15 கடைசி நாள்!

0
பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு, பள்ளிக் கல்வித்துறையில் வேலை - ஜூலை 15 கடைசி நாள்!
பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு, பள்ளிக் கல்வித்துறையில் வேலை – ஜூலை 15 கடைசி நாள்!

தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள 152 பணியிடங்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதால் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்டி தொட்டி எங்கும் இருக்கும் அனைத்து மாணவர்களும் நலத்திட்டங்களின் பயன்பாடுகள் சென்றடைய வேண்டும் என்பதால் அனைத்து நலத்திட்டங்களையும் சேர்த்து தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற பட்டதாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் அறிவித்துள்ளார்.

ரூ.65,000/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கவும்..!

இந்த திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள 152 பணியிடங்களுக்கு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்கள் 2024 ஜூன் மாதம் வரை பணியில் இருப்பார் எனவும் அவர்களுக்கு 32 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here