அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க திட்டம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

0
அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க திட்டம் - ஒன்றிய அரசு அறிவிப்பு!
அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க திட்டம் - ஒன்றிய அரசு அறிவிப்பு!
அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க திட்டம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது 4 யானை காப்பகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று 5 ஆவது யானை காப்பகமாக அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

யானை காப்பகம்:

தமிழகத்தில் தற்போது தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளும் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. யானைகள் பெரும்பாலும் உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்காக அவ்வப்போது இடம்பெயர்ந்துகொண்டே இருக்கும். தற்போது காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு நிலங்களாக மாற்றப்பட்டு வருவதால் யானைகள் ஊருக்குள் புகுவது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் யானைகள் முதிர்ந்த யானையின் தலைமையில் கூட்டமாக ஒரு குடும்பமாக வாழ நினைக்கின்றன.

இதனால், இடம் பெயரும் போது கூட கூட்டமாகவே இடம் பெயர்ந்து செல்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தான் அதிகமாக யானைகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய வனப்பகுதிகளில் அதிகமாக யானைகள் வசித்து வருகின்றன. தமிழ்நாட்டில் எந்த விலங்குகளையும் கொலை செய்ய கூடாது என வனப்பாதுகாப்பு சட்டமும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.

இலவச மின்சாரம் வாக்குறுதி என்னாச்சு? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் தற்போதைக்கு 4 யானைகள் காப்பகம் உள்ளது. இந்நிலையில், யானைகளை பாதுகாக்க கூடுதலாக ஒரு காப்பகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை மாவட்டம் அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 ஆவது யானை காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று உலக யானைகள் தினம் என்பதால் 5-வது யானைகள் காப்பகமாக அகத்திய மலை ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here