பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஊழியர்களின் நலனிற்காக வெளியிட்ட அறிவிப்பு – குவியும் வாழ்த்துக்கள்!

0
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஊழியர்களின் நலனிற்காக வெளியிட்ட அறிவிப்பு - குவியும் வாழ்த்துக்கள்!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஊழியர்களின் நலனிற்காக வெளியிட்ட அறிவிப்பு - குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஊழியர்களின் நலனிற்காக வெளியிட்ட அறிவிப்பு – குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் மக்களின் பேராதரவை பெற்ற நிறுவனமான மீசோ, தனது ஊழியர்களின் நலனிற்காக 11 நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நிறுவன ஊழியர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

இந்தியாவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான Meesho, கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக மீசோ நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்த தளத்தில் இந்தியாவை சேர்ந்த சிறிய தொழிலாளர்கள் கூட வணிகம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் meesho-வை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் ஆன்லைன் தளங்களில் மார்க்கெட் சூடு பிடிக்கும். அதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். எனவே மீசோ தனது ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் இந்த ஸ்பெஷல் சீசன் சேல் முடிந்த பின் ஊழியர்களுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை விடுமுறை என மீசோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய ஐடி துறையில் இதுதான் நடக்கிறது.. அப்போ வேலை போகத்தான் செய்யும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்திற்கு Reset and Recharge என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருவதாக மீசோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மீசோ வெளியிட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவில் இது போன்ற தொழில் முனைவோர்கள் தேவை, மீசோ போன்ற நிறுவனம் ஊழியர்கள் மீது அக்கறை கொள்வது சந்தோசமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!